வணக்கம் ,
தமிழ் இலக்கியம், தமிழர்களாகிய நமக்கு தமிழை பேசுவதற்கே தற்பொழுதெல்லாம் வாய்ப்பு குறைந்து வருகிறது ,இதில் இலக்கியங்களை எங்கே தேடுவது , இதற்கு உங்களை நான் குற்றம் சொல்ல போவதில்லை ஏனெனில் மாறி வரும் சூழல் நம்மை மாற்றி வைத்திருகிறது. தூய தமிழை சிந்திக்கவோ , எழுதவோ பேசவோ நம்மில் பலருக்கு வாய்ப்பு அமைவதில்லை ,கணினிகளின் ஓட்டத்தில் கலைகளை மறந்து விடுகிறோம். ஏனெனில் தாய் மொழியில் மட்டுமே நாம் இயல்பாக சிந்திக்க முடியும்,நமக்குள் எழும் எண்ணங்களை கவிதையாகவோ, கட்டுரையாகவோ விவரிக்க முடியும், இதை எல்லாம் மீறி நமக்கு வரும் வாய்ப்பை பயன்படுத்தி இலக்கியங்களை தேடினால் இலக்கியங்கள் கிடைக்கும் ஆனால் அர்த்தம் புரிவதில்லை. இவையெல்லாம் என்னுடைய அனுபவ பாடம்தான் ,எனவே தான் என்னால் முடிந்த இலக்கியங்களை அதன் அர்த்தங்களுடன் அளிக்கலாம் என சிறு முயற்சி செய்திருக்கிறேன்.ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டி காட்டுமாறு வேண்டி விளைகிறேன் .
நன்றி வணக்கம் .
Thursday, August 19, 2010
Subscribe to:
Comments (Atom)
